விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமண ஆவணப்படத்தில் தன்னுடைய தயாரிப்பான 'நானும் ரவுடி தான்' படத்தின் காட்சிகளை அனுமதியின்றி இருவரும் பயன்படுத்தியதாக தனுஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரூ. 10 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் வழக்கு தொடர்பாக 2025 ஜனவரி மாதம் 8ஆம் தேதிக்குள் பதிலளிக்க நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.