சங்ககிரியில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய தேமுதிகவினர்

66பார்த்தது
சேலம் மாவட்டம் சங்ககிரியில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உருவப்படத்திற்கு சேலம் மேற்கு மாவட்ட தேமுதிக சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி கதறி அழுதபடி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். தேமுதிக நிறுவன தலைவரும் தமிழக முன்னாள் சட்டமன்ற தலைவருமான விஜயகாந்த் அவர்கள் கடந்த டிசம்பர் 28 வியாழக்கிழமை உடல் நலக்குறைவால் காலமானார் அதனைத் தொடர்ந்து அவரது உடல் தேமுதிக கட்சி அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. சங்ககிரி ஒன்றியம் தேவண்ணகவுண்டனூர் ஊராட்சி கிடையூர் மேட்டூர் பகுதியில் சேலம் மேற்கு மாவட்ட தேமுதிக சார்பில் மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் ரமேஷ், தலைமையில் பொருளாளர் தங்கமணி உள்ளிட்ட தேமுதிகவினர் விஜயகாந்தின் உருவபடத்திற்கு மாலை அணிவித்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். அப்போது சங்ககிரி ஒன்றிய அவை தலைவர் செந்தில்குமார், ஒன்றிய துணைச் செயலாளர் சுப்பிரமணி, ஒன்றிய பொருளாளர் மனோகர், கிடையூர் மேட்டூர் கிழக்கு வளவு காலனி கிளைச் செயலாளர் தங்கராஜ் மற்றும் நிர்வாகிகள் மூர்த்தி, முத்துக்குமார், குமரேசன், முருகன் மகளிர் அணி நிர்வாகிகள் உமாபதி, செல்வி, உஷா, விஜயா உட்பட ஒன்றிய, நகர, மகளிர் அணி நிர்வாகிகள் அப்பகுதி பொதுமக்கள், பெண்கள், சிறுவர், சிறுமிகள் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தியதோடு கதறி அழுதபடி கண்ணீர் மல்க உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி