சேலம் மாவட்டம், சங்ககிரி மலையடிவாரம் பகுதியில் உள்ள அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோயில் வளாகத்தில் உள்ள அருள்மிகு ஆறுமுகவேலன் சுவாமிக்கு ஆடிகிருத்திகையையொட்டி தி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
ஆடி கிருத்திகையையொட்டி ஆறுமுகவேலன் சுவாமிக்கு 108 லிட்டர் பால், தயிர், திருமஞ்சனம், சந்தனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆறுமுகவேலன் சுவாமியை வழிப்பட்டுச் சென்றனர்.