சங்ககிரியில் துப்புரவு பணியாளர் குடிசை வீடு எறிந்து நாசம்

582பார்த்தது
சேலம் மாவட்டம் சங்ககிரி பேரூராட்சிக்குட்பட்ட புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் சின்னம்மாள் (52) கணவனை இழந்த இவர் சங்ககிரி பேரூராட்சியில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் வழக்கம்போல் இன்று பேரூராட்சி தூய்மை பணிக்கு சென்றுள்ளார். அப்போது திடீரென அவரது குடிசை வீடு தீப்பற்றி மலமலவென எரிய தொடங்கியது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் சங்ககிரி தீயணைப்பு துறையினருக்கு கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் துப்புரவு பணியாளர் மூதாட்டி சின்னம்மாவின் வீடுகள் முழுவதும் எரிந்ததோடு வீட்டில் வைத்திருந்த அனைத்து பொருட்களும் எரிந்து தீயில் கருகி சேதமடைந்தது.

மேலும் இது குறித்து சங்ககிரி போலீசார் வழக்கு பதிவு செய்து துப்புரவு பணியாளர் மூதாட்டியின் வீடு தானாக தீப்பற்றி எரிந்ததா? அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you