சேலத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு

1885பார்த்தது
சேலத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு
சேலம் கொண்டலாம்பட்டி அருகே பெரியபுத்தூரைச் சேர்ந்தவர் சுந்தரம் (வயது39), பந்தல் அமைக்கும் தொழிலாளி. பெரிய புத்தூர் அக்ரஹாரம் பகுதியில் எருதாட்டம் நிகழ்ச்சிக்காக பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற மின்சார ஒயரில் சுந்தரம் கை பட்டுள்ளது. அப்போது மின்சாரம் தாக்கி சுந்தரம் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சுந்தரம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தொடர்புடைய செய்தி