சேலம் ராஜகணபதி கோயிலில் சத்தாபரணம் ஊர்வலம்

55பார்த்தது
சேலம் ராஜகணபதி கோயிலில் சத்தாபரணம் ஊர்வலம்
சேலம் ராஜகணபதி கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி விநாயகருக்கு காலை, மாலை சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. ஒவ்வொரு நாளும் ராஜகணபதி ஒவ்வொரு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்து வந்தார். நேற்று(செப்.17) 11-வது நாள் விழா வ.உ.சி. பூ மார்க்கெட் மற்றும் கமிஷன் ஏஜெண்ட் முன்னேற்ற சங்கம் சார்பில் நடந்தது.

இதையொட்டி காலையில் ராஜகணபதிக்கு 108 சங்காபிஷேகமும், சிறப்பு வழிபாடும் நடந்தது. விநாயகர் சிலைக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. தொடர்ந்து கோயிலில் இருந்து சத்தாபரணம் ஊர்வலம் புறப்பட்டு ஆனந்தாபாலம், பட்டைக்கோவில் வழியாக மீண்டும் கோயிலை வந்தடைந்தது. இந்தச் சத்தாபரணம் வாகனம் 5 டன் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

தொடர்புடைய செய்தி