ஆங்கில புத்தாண்டையொட்டி சின்னதிருப்பதி கோவிலில் சிறப்பு பூஜை

72பார்த்தது
ஆங்கில புத்தாண்டையொட்டி சின்னதிருப்பதி கோவிலில் சிறப்பு பூஜை
சேலம் சின்னதிருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி நேற்று அதிகாலை சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், அலங்காரம் செய்யப்பட்டது. கோவிலுக்கு வந்திருந்த அனைவரையும் 8-வது வார்டு கவுன்சிலர் எம். மூர்த்தி வரவேற்றார். இந்த சிறப்பு பூஜையில், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் அருணாசலம், ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராம் நாயுடு, அஜய்குமார், கேபிள் மணி, மோகன், மதன், தனசேகர், சம்பத், வசந்தமணி, விமல்ராஜ், ராம்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆங்கில புத்தாண்டையொட்டி கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் லட்டு மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி