முடியாது என்ற எதிர்மறை சொல்லை பயன்படுத்துவது அப்துல் கலாமுக்கு எப்போதும் பிடிக்காது. இது குறித்து அவர் கூறும்போது“நம் நாட்டில் எதை சொன்னாலும் முடியாது என சொல்கின்ற வியாதி இருக்கிறது. இளைஞர்கள் எதையும் சாதிக்கக்கூடியவர்கள். ‘எதையும் என்னால் சாதிக்க முடியும்’என்று சொல்லும் கோடிக்கணக்கான இளைஞர்களின் தன்னம்பிக்கையுடன், மூத்தோர்களின் நல்வழிக்காட்டியும் கிடைக்கும்பட்சத்தில் இளைஞர்களால் இன்னும் அழகாக ஜொலிக்க முடியும்.” என கூறினார்.