காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிப்பு

51பார்த்தது
காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிப்பு
கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் நீரின் அளவு 1,30,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 1,00,000 கனஅடி நீரும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 30,000 கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. கபினி, ஹேமாவதி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை தொடர்வதால் காவிரியில் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி