இந்தியாவின் தூண்களான இளைஞர்களை "கனவு காணுங்கள் கனவு காணுங்கள்" என சொன்னவர் மறைந்தவர் அப்துல் கலாம். அவர் ஒருமுறை அளித்த பேட்டியின் போது உங்களின் நிறைவேறாத கனவு என்ன? என செய்தியாளர்கள் சார்பில் கேட்கப்பட்டது. அதற்கு, “நாட்டு மக்களின் முகத்தில் மலர்ந்த சந்தோஷப் புன்னகையைப் பார்க்க வேண்டும் என்பதே என்னுடைய கனவு. அது நிறைவேறக்கூடிய ஆசை தான். என் லட்சியம், இந்தியாவை வளமான நாடாகப் பரிணமிக்கச் செய்யும்.” என்றார்.