பல இளைஞர்கள் தோல்விகளை சமாளிக்க முடியாமல் தடுமாறுகிறார்கள். அவர்களுக்காகவே முத்தான வார்த்தைகளை உதித்திருக்கிறார் அப்துல் கலாம். “இங்கே எந்தவொரு விஷயத்தை நாம் செய்தாலும் அங்கே பிரச்னைகள், தோல்விகள் வருவது இயல்பு... ஆனால் பிரச்னைகளோ,தோல்விகளோ எந்தவொரு தனிப்பட்ட நபரை ஆட்கொள்ளும் தலைமையான விஷயமாக இருக்கக்கூடாது, அந்த பிரச்னைகளை தோற்கடித்து அதில் நீங்களே வெற்றியாளராக, தலைமையாளராக இருக்க வேண்டும்.” என்கிறார்.