பேருந்தின் முன் விழுந்து முதியவர் தற்கொலை

76பார்த்தது
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ரவுண்டானா அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த அரசு பேருந்தின் பின் சக்கரத்தில் விழுந்து முதியவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், முதியவர்ரின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, அந்த முதியவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது, முதியவர் தற்கொலை செய்துகொண்ட வீடியோ வெளியாகியுள்ளது.

நன்றி: நியூஸ் தமிழ் 24x7

தொடர்புடைய செய்தி