கேரளாவின் கொச்சியில் 'ப்ரோமான்ஸ்' படத்தின் படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டது. நள்ளிரவு 1.30 மணியளவில் படப்பிடிப்பின் போது கார் விபத்துக்குள்ளானது. ஒரு ஹோட்டல் முன் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு பைக்குகள் மீது கார் மோதியது. இதில் காரில் இருந்த மலையாள நடிகர்கள் அர்ஜுன் அசோகன், சங்கீத் பிரதாப் ஆகியோர் காயமடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். நடிகர் சங்கீத் பிரதாப் 'பிரேமலு' படத்தின் மூலம் பிரபலமானார்.