சேலம் கிழக்கு மாவட்ட தி. மு. க. செயலாளர் சிவலிங்கம் அறிக்கை

80பார்த்தது
சேலம் கிழக்கு மாவட்ட தி. மு. க. செயலாளர் சிவலிங்கம் அறிக்கை
சேலம் கிழக்கு மாவட்ட தி. மு. க. செயலாளர் எஸ். ஆர். சிவலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: -
சேலம் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் 18 வயது நிரம்பக்கூடிய புதிய வாக்காளர்கள் வாக்களிக்க தகுதியேற்படுத்தும் நாளாக 1. 1. 2025 கொண்டு இந்திய தேர்தல் ஆணையம் வருகிற 29-ந் தேதி அன்று வாக்காளர் பட்டியலை வெளியிட உள்ளது. இந்த வாக்காளா் பட்டியலில் பெயர்களை சேர்க்கவும், நீக்கவும், திருத்தம் செய்யவும், வருகிற 29-ந் தேதி முதல் அடுத்த மாதம் (நவம்பர்) 28-ந் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. அடுத்த மாதம் (நவம்பர்) 9-ந் தேதி (சனிக்கிழமை), 10-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை), அடுத்த வாரத்தில் வரும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளான 23-ந் தேதி, 24-ந்தேதியும் நிர்ணயிக்கப்பட்ட மையங்களில் நடைபெற உள்ளது. புதிய வாக்காளர்களின் பெயர்களையும், வாக்காளர் பட்டியலில் இதுவரை இடம்பெறாதவர்கள் பெயர்களையும், புதிதாக குடி அமர்ந்த வாக்காளர்களின் பெயர்களையும், வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும். இந்த பணிகளில் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், கிளைக்கழக செயலாளர்கள் முழு மூச்சுடன் ஈடுபட வேண்டும். இந்த வாக்குச்சாவடி பட்டியல் தயாரித்தல் பணியில் கட்சி நிர்வாகிகளோடு, பாக நிலை முகவர்கள் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் முழுமையாக நிறைவேற்றிட வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி