1 கோடி பனை விதைகள் நடும் பணி இன்று தொடக்கம்

75பார்த்தது
1 கோடி பனை விதைகள் நடும் பணி இன்று தொடக்கம்
சேலம் மாவட்டம் வீரபாண்டி ஊராட்சி ஒன்றியம் கொப்பம் ஏரியில் காவிரிக்கரை மற்றும் நீர்நிலைகளின் கரையோரங்களில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி இன்று (திங்கட்கிழமை) மதியம் 3 மணிக்கு தொடங்கி வைக்கப்படுகிறது. இதில், அமைச்சர்கள் கே. என். நேரு, மெய்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டு பனை விதைகளை நடும் பணியை தொடங்கி வைக்கிறார்கள்.
தமிழ்நாடு முழுவதும் பனை விதைகள் சேகரிக்கப்பட்டு 5 கட்டங்களாக பனை விதைகள் நடும் பணி ஒகேனக்கல் முதல் பூம்புகார் வரை தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் காவிரிக்கரையின் இருபக்கங்களிலும் 416 கிலோ மீட்டர் தொலைவிற்கு நடக்க இருக்கிறது. இதேபோன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட நீர்நிலைகளிலும் பனை விதைகளை நடும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இப்பணியில் சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்கள், சமூக சேவகர்கள், தொண்டு நிறுவனங்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பங்கேற்று பனை விதைகளை நட உள்ளனர். இதனை தொடர்ந்து, அமைச்சர் கே. என். நேரு, சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கான புதிய பஸ் சேவைகளை தொடங்கி வைக்க உள்ளதாக மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி