சேலம் ஜாகீர் அம்மாபாளையம் காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் மாசித்திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி இன்று (புதன்கிழமை) காலையில் பக்தர்கள் பூங்கரகம் எடுத்தல் மற்றும் பொங்கல் பிரார்த்தனை நடக்கிறது. மாலையில் பக்தர்கள் அலகு குத்துதல், அக்னி கரகம் எடுக்கும் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுவார்கள்.
நாளை (வியாழக்கிழமை) மாலையில் பக்தர்கள் தீமிதி விழாவும், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மாலையில் மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் சோமசுந்தரம், செல்வி ஆகியோர் செய்து வருகின்றனர்.