பறக்கும் படை சோதனை 4கிலோ வெள்ளி கொலுசு ரூ. 1¼ லட்சம் பறிமுதல்

68பார்த்தது
பறக்கும் படை சோதனை 4கிலோ வெள்ளி கொலுசு ரூ. 1¼ லட்சம் பறிமுதல்
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுப்பதற்காக பறக்கும் படையினர் தலைமையில் போலீசார் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் துணை ராணுவத்தினரும் அவர்களுடன் இணைந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெள்ளி கொலுசு பறிமுதல்
சேலம் புதிய பஸ் நிலையம் பகுதியில் நேற்று முன்தினம் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் ரூ. 3 லட்சம் மதிப்பிலான ரூ. 4 கிலோ வெள்ளி கொலுசு இருந்தது தெரியவந்தது. மேலும் அதை கொண்டு வந்த சீனிவாசனிடம் உரிய ஆவணம் இல்லாததால் அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் அழகாபுரம் பகுதியில் பறக்கும் படையினர் சோதனையின் போது கன்னங்குறிச்சியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் காரில் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ. 1 லட்சத்து 44 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட வெள்ளி கொலுசு மற்றும் பணம் ஆகியவை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மயிலிடம் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி