சேலம் வன்னியர் நல அறக்கட்டளை, அச்சமில்லை அறக்கட்டளை ஆகியவை இணைந்து ந. இறைவன் எழுதிய 'வரலாற்றில் வன்னியர் மகாவம்சம்' என்ற நூல் வெளியீட்டு விழா நேற்று சுந்தர் நகரில் உள்ள முத்து மகாலில் நடைபெற்றது. இதற்கு வன்னியர் நல அறக்கட்டளை செயலாளர் பசுமை பழனிச்சாமி வரவேற்று பேசினார். முற்போக்கு சமூக நீதிப்பேரவை நிறுவனர் விமுனாமூர்த்தி தொடக்கவுரையாற்றினார். சென்னை ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி பொன் கலையரசன் நூலை வெளியிட்டார். அதை சேலம் மாநகராட்சி செயற்பொறியாளரும், வன்னியர் நல அறக்கட்டளை கட்டிட நிதிக்குழு தலைவருமான மு. பழனிசாமி உள்ளிட்ட பலர் பெற்று கொண்டனர். இந்த விழாவில் முன்னாள் துணைவேந்தர் முருகேசபூபதி, வன்னியர் நல அறக்கட்டளை தலைவர் சிவலிங்கம், ஆலோசகர் ரத்தினம், சேலம் மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு மோகன் மற்றும் நிர்வாகிகள் ஆறுமுகம், நாகராசன், சபாநாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.