கலைஞர் கனவு இல்ல திட்டம் கூட்டுறவு துறை செயல்படுத்த கோரிக்கை

81பார்த்தது
கலைஞர் கனவு இல்ல திட்டம் கூட்டுறவு துறை செயல்படுத்த கோரிக்கை
தமிழ்நாடு அனைத்துவகை கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களின் பணியாளர்கள் யூனியனின் விரிவாக்கப்பட்ட மாநில செயற்குழு கூட்டம் சேலத்தில் நடந்தது. மாநில தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், தமிழ்நாடு சட்ட பேரவை கூட்டுறவுத்துறைக்கான மானியக்கோரிக்கையின்படி கூட்டுறவு வீட்டுவசதி சங்க பணியாளர்களின் குறைகளை தீர்க்கும் வகையில் பணியாளர் நலன் நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும். கலைஞர் கனவு இல்ல திட்டத்தை கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் மூலம் செயல்படுத்த வேண்டும். பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய 6 ஆண்டுகளுக்கு மேலான வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள ஊதியத்தையும், ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கான ஓய்வு கால நிதிப்பயன்ககளை வழங்க வேண்டும். பணியாளர்களுக்கு மாற்றுப்பணிகளை வழங்க வேண்டும். 12 ஆண்டுகள் செயல்படுத்தப்படாமல் உள்ள புதிய ஊதிய விகித ஒப்பந்தம் ஏற்படுத்தித்தர வேண்டும். உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முடிவில் சேலம் மாவட்ட பொறுப்பாளர் செந்தில் வேலவன் நன்றி கூறினார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி