நீட் தேர்வை ரத்து செய்ய ஆதித்தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டம்

80பார்த்தது
சேலம் மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பில் நேற்று சேலம் கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பேரவையின் சேலம் மத்திய மாவட்ட செயலாளர் சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பு செயலாளர் மாரியப்பன், இளைஞர் அணி செயலாளர் மாணிக்கம், மகளிர் அணி செயலாளர் ராமாயி, மாவட்ட மாணவர் அணி செயலாளர் தினேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை நிலைய செயலாளர் வீரவேந்தன், மாநில தொழிலாளர் அணி துணை செயலாளர் கண்ணன் ஆகியோர் பேசினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும். இந்தியா முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு உடனடியாக நடத்த வேண்டும். கோவிலாங்குளம் அழகேந்திரன் ஆணவ கொலையை கண்டிக்கிறோம். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி. பி. ஐ. க்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் வைத்தனர். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மோகன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மாவட்ட தலைவர் சையத் முஷா, திராவிடர் கழக மாவட்ட தலைவர் இளவழகன், தந்தை பெரியார் திராவிடர் கழக செயலாளர் தங்கராசு, ம. தி. மு. க. மாநகர செயலாளர் அருள்மாது, தமிழக வாழ்வுரிமை கட்சி சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அமிர்தராஜ், திராவிடர் இயக்க தமிழர் பேரவை செயலாளர் சுந்தரவதனம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி