டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை 40 சதவீதம் அதிகரிப்பு

85பார்த்தது
டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை 40 சதவீதம் அதிகரிப்பு
தமிழகம் முழுவதும் கடந்த பிப்ரவரி மாதம் கடைசி வாரம் முதலே கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது. சேலம் மாவட்டத்தில் தற்போது கொளுத்தும் வெயில் காரண மாக டாஸ்மாக் கடைகளில் பிராந்தி, ரம், விஸ்கி, ஒயின் வகை மது வகைகள் விற்பனை சரிந்துள்ளது. அதேநேரத்தில் பீர் வகைகளின் விற்பனை அதிகரித்துள்ளது. அதாவது, வழக் கத்தைவிட 40 சதவீதம் பீர் விற்பனை அதிகரித்துள்ளதாக டாஸ்மாக் கடை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். டாஸ்மாக் கடைகளுக்கு வழக்கமாக மது அருந்த வருகை தரும் மதுபிரி யர்கள், பிராந்தி, ரம், விஸ்கி போன்றவற்றை வாங்காமல் பீர் வகைகளை ஆர்வமுடன் வாங்கி செல்வதை காணமுடிகிறது. மேலும், தமிழ்நாடு டாஸ்மாக் நிர்வாகம் வீரன் என்ற பெயரில் புதிய மதுபானம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதுவரை ஆங்கில மொழியில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டு வந்த மது பாட்டில்களுக்கு மத்தியில் வீரன் என தமிழில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மதுபான பாட்டிலும் மதுப்பிரியர்களிடம் வர வேற்பை பெற்றுள்ளதாக டாஸ்மாக் பணியாளர்கள் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி