சேலம் பள்ளப்பட்டி ராம் நகரை சேர்ந்தவர் கஸ்தூரி (வயது 34). இவர் தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். அவருடைய வீட்டில் கடந்த மாதம் 3 பவுன் நகை திருட்டு போனது. இதுகுறித்து பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இதில் கஸ்தூரி வீட்டில் நகை திருடியது திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த ஹரிசந்திரன் (19) மற்றும் சேலத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் என தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து நகையை மீட்டனர்.