
சேலம் பாஜக மாநாடு ஒத்திவைப்பு
சேலம் மாவட்டம் ஓமலூர் பைபாஸ் ரோட்டில் சேலம் பெருங்கோட்ட பா. ஜனதா மாநாடு வருகிற 19-ந் தேதி நடைபெறுவதாக இருந்தது. தற்போது மாநாடு நடத்துவது தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன், இந்த மாதம் (ஏப்ரல்) இறுதியில் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. எனவே நாம் அனைவரும் தொடர்ந்து மாநாட்டுக்காக சம்மந்தப்பட்ட குழுக்கள், அதன் பணிகளை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்றும். மாநாட்டுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பா. ஜனதா மாநில துணைத்தலைவர் கே. பி. ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.