அனுமன் ஜெயந்தியில் ஸ்ரீ ஹனுமான் சாலிசா, சுந்தர காண்டம் அல்லது அனுமன் கவசத்தைப் பாராயணம் செய்வது நல்லது. இதனால் மன அழுத்தம், பயம் போன்றவை நீங்கும். அனுமனுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுவது சிறந்தது. இது வீட்டில் பண வரவை அதிகரித்து, அமைதியை ஏற்படுத்தும். அனுமன் கோயிலுக்குச் சென்று வழிபடுவது நல்லது. இதை செய்யும் பட்சத்தில் நல்வாழ்வு உண்டாகும். எதிரிகள் தொல்லை இல்லாமல் நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும்.