ஓமலூர் வக்ஃபு சட்டதிருத்ததை திரும்ப பெறகோரி ஆர்ப்பாட்டம்

59பார்த்தது
ஓமலூர் வக்ஃபு சட்டதிருத்ததை திரும்ப பெறகோரி ஆர்ப்பாட்டம்
வக்பு வாரிய திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் உள்பட பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் ஓமலூர் பஸ் நிலையம் எதிரில் மொஹல்லா மஸ்ஜித் பள்ளிவாசல் முன்பு முத்தவல்லி அப்துல் ரசாக் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 

அப்போது வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதேபோல் ஓமலூர் சந்தைப்பேட்டை பகுதியில் ஜாமியா பள்ளிவாசலில் மதியம் தொழுகைக்கு வந்த இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முத்தவல்லி அப்துல் ரசாக் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி