பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு இழுபறி!

83பார்த்தது
சேலம் பெரியார் பல்கலைக்கழத்தில் பேராசிரியர்களுக்கான பதவி உயர்வு வழங்காமல், ஓராண்டாக கிடப்பில் போடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுத்துள்ளது. இது தொடர்பாக பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க நிர்வாகிகள், உயர்கல்வித்துறைருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் பிரேம்குமார் வரலாற்றுத்துறையில் உதவிப்பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணைக்குழு, தனது அறிக்கையினை சமர்ப்பித்து ஒரு ஆண்டுக்கு மேலகிறது. பல்கலைக் கழக சாசன விதிகளின்படி 3 மாதங்களுக்கு மேல் ஒருவரை பணியிடை நீக்கத்தில் வைத்திருக்க முடியாது. இதேபோல், தமிழக அரசின் பணியாளர் நடத்தை விதிகளுக்கும், பெரியார் பல்கலைக்கழக சாசன விதிகளுக்கும் முரணாக உள்ள இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, அவரது பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும். பெரியார் பல்கலைக் கழக ஆசிரியர்களுக்கு விடைத்தாள் திருத்தும் உரிமை மறுக்கப்பட்டு வருகிறது. இதனால் ஆசிரியர்கள் பதவி உயர்விற்கான மதிப்பெண் பெறஇயலாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இணைவு பெற்ற கல்லூரிகளுக்கு கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்களாக அனுப்பப்படும் வாய்ப்பும் மறுக்கப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்களின் பதவி உயர்வானது பாதிக்கப்பட்டுள்ளதாகவும். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி