ஓமலூர் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சட்ட விழிப்புணர்வு உலகம் நடத்தும் சாமானியனுக்கான சட்டப் பயிற்சி வகுப்பு எனும் தலைப்பில் பொது மக்களுக்கு அடிப்படை நடைமுறை சட்ட திட்டங்களை பற்றிய விழிப்புணர்வு மற்றும் பயிற்சி வகுப்பு இலவசமாக நடைபெற்றது. சமூக ஆர்வலர் முனைவர். இரா. பெரியசாமி தலைமை தாங்கினார். O K. E. குட்டி முன்னிலை வகித்தார். இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.