நாகம்மா கோயில் புதிய மேற்கூரை கலசம் திருக்குட நீராட்டு விழா!

57பார்த்தது
சேலம் மாவட்டம் ஓமலூர், சந்தைபேட்டையில் ஓம்சக்தி கோவில் அமைந்துள்ளது. ஓம்சக்தி கோயில் வளாகத்தில் அமைந்துள்ள நாகாத்தம்மன் சந்நதி பழைய மேற்கூரை பழுதடைந்து காணப்பட்ட நிலையில் கடந்த சில வாரங்களாக புதிய மேற்கூரை அமைக்கும் பணி நடைபெற்று வந்தன இந்த நிலையில் புதிய மேற்கூரை அமைக்கும் பணி நிறைவடைந்த நிலையில் நேற்று மதியம் விமான கலசத்திற்கு சிறப்பு பூஜை செய்து மேற்கூரையில் நிறுவப்பட்ட விமான கலசத்திற்கு திருக்குட நீராட்டு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளாமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

தொடர்புடைய செய்தி