முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று (மார்ச் 9) நடைபெறுகிறது. நடைபெறவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடர் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது. நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் திமுகவின் நிலைப்பாடு எப்படி இருக்க வேண்டும், எந்தெந்த பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்ப வேண்டும் என்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.