மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே. என். நேரு மதகுகளை உயர்த்தி தண்ணீரை திறந்து வைத்தார். முதல் கட்டமாக வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி விருந்து 12, 000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி. எம். செல்வகணபதி, மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி மற்றும் வருவாய் துறை, நீர்வளத்துறை அதிகாரிகள்ஏராளமானோர் பங்கேற்றனர். மேலும் மேட்டூர் அணைக்கு ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் வருவதால் காவிரி நீர்த்தேக்க பகுதிகளில் நீர்வளத்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.