மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் மனு சிங்விக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையிலிருந்து நேற்று(டிச.05) கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அவைத்தலைவர் ஜகதீப் தன்கர் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்த விரிவான விசாரணைக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே இச்சம்பவம் தொடர்பாக பேசிய அபிஷேக் மனு சிங்வி, 'இது எனக்கு வியப்பாக உள்ளது. அவையில் நேற்று நான் மொத்தமாக 3 நிமிடங்கள்தான் இருந்தேன்' என கூறியுள்ளார்.