`1 லட்சம் டாலர்' உச்சத்தை தொட்ட பிட்காயின் மதிப்பு

65பார்த்தது
`1 லட்சம் டாலர்' உச்சத்தை தொட்ட பிட்காயின் மதிப்பு
கிரிப்டோ கரன்சி வரலாற்றிலேயே நேற்று பிட்காயினின் மதிப்பு ஒரு லட்சம் டாலரை தாண்டி உள்ளது. இந்த உயர்வுக்கு அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்றது தான் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. முன்னதாக, அமெரிக்காவை 'கிரிப்டோ கரன்சியின் தலைநகரமாக' மாற்றப்போவதாக வாக்குறுதி கொடுத்தார். அந்த வகையில் சமீபத்தில் அமெரிக்காவின் செக்யூரிட்டி அன்ட் எக்சேஞ்ச் கமிஷனிற்கு தலைவராக பால் ஆட்கின் என்பவரை நியமித்தார். அவர் பிட் காயின் ஆதரவாளர் ஆவார்.

தொடர்புடைய செய்தி