தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை (டிச., 07) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்காள விரிகுடாவில் இலங்கை-தமிழக கடற்கரையில் வரும் 12ஆம் தேதி வாக்கில் அடையும். இதனால் 11ஆம் தேதி மயிலாடுதுறை, நாகை, திருவாருர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னையில் ஒருசில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது.