கடந்த அக்டோபர் 27-இல் விழுப்புரம் வி.சாலையில் நடைபெற்ற தவெக மாநாட்டின் போது 100 அடி கொடிக் கம்பத்தில் கட்சியின் கொடியை அக்கட்சியின் தலைவர் விஜய் ஏற்றி வைத்தார். மாநாடு நடந்து முடிந்தும் கொடி கம்பத்தில் கொடி பறந்துகொண்டிருந்த சூழலில், சமீபத்திய ஃபெஞ்சல் புயல் காரணமாக சேதமடைந்தது. இந்த நிலையில் சேதம் அடைந்த கொடி இன்று (டிச. 06) மாற்றப்பட்ட நிலையில் புதியதாக வேறு கொடி ஏற்றப்பட்டது.