தனது தந்தையின் தோள்களில் அமர்ந்து திருத்தலங்களை தரிசிக்க செல்லும் திருஞானசம்பந்தர், திருவட்டத்துறை அரத்துறைநாதரை தரிசிக்க கடுமையான கோடை காலத்தில் நடந்து சென்றார். விருத்தாச்சலத்தை அடுத்த இறையூரில் இளைப்பாறிய அவரின் தாகத்தை தீர்க்க ஈசன் அந்த பகுதியில் நீரூற்றை உருவாக்கினார். இதனால் இறைவன் தாகம்தீர்த்தபுரீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். இந்த கோயிலில் இறைவன் சதுர வடிவ ஆவுடையாரின் நடுவே பச்சைக் கல்லால் ஆன லிங்கத் திருமேனியாக காட்சி தருகிறார்.