சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சர்க்கார் கொல்லப்பட்டி ஊராட்சி, பாறை வட்டம் பகுதியில் சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 9 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை இன்று நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் அருள் இவ்விழாவில் பங்கேற்று பணியினை தொடங்கி வைத்தார். அப்பகுதி மக்கள் இவ்விழாவில் பங்கேற்றனர்.