காடையாம்பட்டி கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு

65பார்த்தது
காடையாம்பட்டி கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யும் வகையில் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்துக்காக மேட்டூர் அனல்மின் நிலையம் அருகில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு அங்கிருந்து தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இதற்கிடையே காடையாம்பட்டி கூட்டு குடிநீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பீறிட்டு சாலையில் வெளியேறியது. தகவல் அறிந்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், நீரேற்று நிலையத்தில் தண்ணீர் எடுக்கும் பணியை நிறுத்தி வைத்ததுடன், குடிநீர் குழாய் உடைப்பினை சீரமைத்து சரிசெய்தனர்.

தொடர்புடைய செய்தி