இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா, பிரதமர் நரேந்திர மோடியை நேற்று (மார்ச் 18) நேரில் சந்தித்தார். அண்மையில் லண்டனில் தனது முதலாவது சிம்பொனி இசை அரங்கேற்றம் செய்து திரும்பிய நிலையில் அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இளையராஜாவுக்கு மோடி தனது எக்ஸ் பக்கத்தில் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.