நடிகரும், மநீம கட்சி தலைவருமான கமல்ஹாசன் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "உடல் ஆரோக்கியத்துக்கும் மன நலனுக்கும் ஈகைச் சிந்தைக்கும் எளியோரை அரவணைக்கும் தன்மைக்கும் குறியீடாக விளங்கும் நன்னாள்; சகோதரத்துவத்தையும் சமத்துவத்தையும் எடுத்துக்காட்டும் பெருநாளாம் ரம்ஜான் கொண்டாடும் அன்பர்களுக்கு என் இனிய வாழ்த்துகள்" என பதிவிட்டுள்ளார்.