கொத்தாம்பாடி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா

78பார்த்தது
ஆத்தூர் அருகே கொத்தாம்பாடி மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கொத்தாம்பாடியில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 13ஆம் தேதி காப்பு கட்டுதளுடன் தேர் திருவிழா தொடங்கியது. நாள்தோறும் அம்மனுக்கு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்ற நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான மாரியம்மன் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீ மாரியம்மன் அம்மனுக்கு அருள் பாலித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி