ஆத்தூர் அருகே கொத்தம்பாடி பகுதியில் அமைந்துள்ள தீப செல்லியம்மன் திருக்கோவிலில் திருத்தேர் வடம் பிடித்த நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கொத்தம்பட்டி ஊராட்சியில் ஸ்ரீ மாரியம்மன் ஸ்ரீ தீப செல்லியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில்தேர் திருவிழா கடந்த 13ஆம் தேதி காப்பு கட்டுகளுடன் தொடங்கி நடைபெற்று வந்தது. திருவிழாவில் முக்கிய நிகழ்வான பேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. 30 அடி உயரம் கொண்ட அலங்கரிக்கப்பட்ட தேரில் செல்லியம்மன் பக்தர்களுக்கு அருள் அளித்தார். சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.