கோவை - பீகார் ரெயில் சேவை நவம்பர் வரை நீடிப்பு

63பார்த்தது
கோவை - பீகார் ரெயில் சேவை நவம்பர் வரை நீடிப்பு
கோவையிலிருந்து திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக வழியாக பீகார் மாநிலம் பரௌனிக்கு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயிலின் சேவை காலம் இன்று(செப்.13) முதல் நவம்பர் மாதம் வரை நீட்டிப்பு செய்து ரெயில்வே நிர் வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது,

அதன்படி கோவை-பரவுனி சிறப்பு ரெயில் (06059) இன்று முதல் நவம்பர் 26-ந் தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் கோவையிலிருந்து காலை 11.50 மணிக்கு புறப்பட்டு திருப்பூர், ஈரோடு வழியாக மதியம் 2.47 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 2.50 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர், கூடூர், நெல்லூர், ஓங்கலே, விஜயவாடா, ராஜமுந்திரி வழியாக வியாழக்கிழமை மதியம் 2.30 மணிக்கு பரவுனி சென்றடையும்.

இதேபோல் மறு மார்க்கத்தில் பரவுனி- கோவை சிறப்பு ரெயில் (06060) இன்று 13-ந் தேதி முதல் நவம்பர் 29-ந் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் பரவுனியிலிருந்து இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக ஞாயிற்றுக்கிழமை இரவு 11.40 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 11.42 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர் வழியாக மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு கோவை சென்றடையும். இந்தத் தகவல் சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி