தாமரை கிழங்கு அல்லது தாமரை தண்டு பல்வேறு மருத்துவ நன்மைகளை உடலுக்கு கொடுக்கிறது. சர்க்கரை நோய், சிறுநீரகக்கோளாறு, மூட்டுவலி போன்றவற்றுக்கு மருந்தாகவும், கர்ப்பிணி பெண்களின் ஆரோக்கியத்துக்கும் இந்த கிழங்கு அதிகளவு பயன்படுகிறது. நீருக்கடியில் வளர்வதால் இது மிகவும் குளிர்ச்சியானது. தாமரைத் தண்டை உண்டதும் வயிற்றிலும் ரத்தத்திலும் உள்ள வெப்பம் குறைவதாக சீன மூலிகை மருத்துவம் கூறுகின்றது.