விக்கிரவாண்டியில் இன்று (அக். 27) நடைபெறும் தவெக மாநாட்டுக்கு ஓய்வு பெற்ற ராணுவ வீரரான பெருமாள் ராணுவ உடையில் வந்தார். அவர் கூறும்போது, “தலைவர் விஜயை நம்பி வந்தால் எந்த குறையும் வராது, வந்தாலும் எங்களுக்குள்ள நாங்கள் வைத்து கொள்வோம். 2026-இல் அவரை முதலமைச்சராக ஆக்கி காட்டுவோம். விஜய்க்கு எந்தவொரு சிக்கலும் வராமல் பார்த்துக் கொள்வேன், அவர் கூடவே நான் இருப்பேன்” என கூறினார்.