ஆத்தூர் புனித ஜெயராக்கினி அன்னை ஆலயத்தில் தேர் பவனி வெகு விமர்சையாக நடைபெற்றது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் ராணிப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள 100 ஆண்டுகள் பழமையான புனித ஜெயராக்கினி அன்னை ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15ஆம் தேதி தேர் பவனி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டு கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவில் முக்கிய நிகழ்வாக தேர் பவனி விழாவில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். படகு வடிவில் அலங்கரிக்கப்பட்ட தேரில் அன்னை மாதா காட்சி அளித்தார். உப்பு மிளகு மற்றும் பூக்களால் அன்னை மாதா மீது தூவி பிரார்த்தனை மேற்கொண்டனர்.