சேலம் மாவட்டம் ஆத்தூரில் விவசாய சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் இராமநாய்க்கன்பாளையம், அப்பம சமுத்திரம், தென்னங்குடி பாளையம், உள்ளிட்ட பகுதிகளில் இலவச வீட்டு மனைபட்டா கேட்டும் ஏற்கனவே அரசு வழங்கப்பட்ட வீட்டு மனைகளை ஆக்கிரமிப்பு அகற்றக் கோரியும், குச்சி கிழங்கு, பாக்கு விலை வீழ்ச்சி விவசாயிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்படுவதாகவும் பாதிப்புகளை கணக்கெடுத்து உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் எனவும் ஆத்தூர் உழவர் சந்தையில் முன்பு ஆக்கிரப்புகளை அகற்ற வேண்டும் எனவும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் முழங்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் , கோட்டாட்சியர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கோரிக்கைகளை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டக்காரர்கள் அனைவரும்அங்கிருந்து கலைந்து சென்றனர்.