போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகள் விற்பனை

68பார்த்தது
போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகள் விற்பனை
சென்னை புளியந்தோப்பு பகுதியில் போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகள் விற்பனை செய்த சம்பவத்தில் போலீசார் 4 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து சுமார் 1,700 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த பார்த்திபன், புளியந்தோப்பைச் சேர்ந்த சஞ்சய், தமிழ்மணி, வில்லிவாக்கத்தைச் சேர்ந்த எரேமியா ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் விசாரிக்கின்றனர்.

தமிழ்நாட்டில் போதைப் பொருள் கலாச்சாரம் தலைதூக்கியுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. காவல்துறை இரும்புக் கரம் கொண்டு இந்த குற்றச் செயல் புரிவோரை ஒடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி