வேன் ஓட்டுநர் சேமலையப்பன் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம்

64பார்த்தது
வேன் ஓட்டுநர் சேமலையப்பன் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம்
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே பள்ளிக் குழந்தைகளை ஏற்றி வந்த வேன் ஓட்டுநர் சேமலையப்பன், மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், குழந்தைகளை பாதுகாக்க சாலையோரம் வேனை நிறுத்தி உயிரிழந்தார். இதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி அவரது குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. சேமலையப்பனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், ரூ.5 லட்சம் காசோலையை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி