போலி ஆவணங்கள் மூலம் ரூ.14 கோடி நில அபகரிப்பு

594பார்த்தது
போலி ஆவணங்கள் மூலம் ரூ.14 கோடி நில அபகரிப்பு செய்த வழக்கில் 3 பெண்கள் உட்பட 6 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜாராம் (73). இவருக்கு சொந்தமாக கணபதி ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் 43 சென்ட் இடம் உள்ளது. இவரது இடத்தில் 18 சென்ட் இடத்தை போலி ஆவணங்கள் மூலம் தயாரித்து சி.எம் கல்யாண மண்டபம் உரிமையாளர் ராஜு என்கிற ஆறுமுகம் அபகரிப்பு செய்தது. ராஜூ உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணையில ராஜாராமின் இடத்தை அபகரித்து விற்றது உறுதி செய்யப்பட்டு உள்ளது. நில அபகரிப்பு பிரிவு போலீசாரும் வழக்கின் குற்றப்பத்திரிக்கையை விரைவாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்து மேல் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி