அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து பாஜக மகளிரணி ஜனவரி 3ஆம் தேதி பேரணி மேற்கொள்ளவுள்ளார். ஜன.3இல் மதுரையில் தொடங்கும் இந்த பேரணி சென்னையில் நிறைவுபெறும் எனவும் பேரணி நிறைவுபெறும் நாளில் ஆளுநரை சந்தித்து மனு வழங்கப்படும் எனவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். முன்னதாக இந்த நிகழ்வை கண்டித்து தனது வீட்டின் முன்பு தன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கொள்ளும் போராட்டத்தில் அண்ணாமலை ஈடுபட்டார்.